மீண்டும் பாய்ந்த தங்கம் விலை: பவுனுக்கு ரூ.2,080 உயர்வு
சென்னையில் இன்று (அக்டோபர் 21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.97,440 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்கா எச்1பி விசா கட்டணத்தை உயர்த்தியது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்தது, மேலும் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் நிதி செலுத்தத் தொடங்கியுள்ளனர். இதனால் தங்க விலை மீண்டும் அதிரடி காட்டி வருகிறது.
இன்று (செவ்வாய்க்கிழமை) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.260 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,180-க்கும், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து ரூ.97,440-க்கும் விற்பனையாகிறது.
மார்க்கெட் நிபுணர்கள், தற்போதைய போக்கு நீடித்தால் இந்த ஆண்டு இறுதிக்குள் பவுன் ரூ.1 லட்சத்தை எட்டும் என்று கணிக்கின்றனர்.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.188, ஒரு கிலோ ரூ.1,88,000 என விற்பனையாகிறது.
இந்த வார தங்கம் விலை நிலவரம்:
- அக்டோபர் 20 – பவுனுக்கு ரூ.95,360
- அக்டோபர் 21 – பவுனுக்கு ரூ.97,440