பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நாடுகளில் தனது தூதரகங்களை நிறுத்தவுள்ளதாக பின்லாந்து அறிவிப்பு!
உலகில் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடாக பெயர் பெற்ற பின்லாந்து, பாகிஸ்தான் உட்பட மூன்று நாடுகளில் செயல்பட்டு வந்த தனது தூதரகங்களின் பணிகளை முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில், தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருக்கும் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளை மனதில் கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள தூதரகங்களை மூட தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் மியான்மரில் அமைந்துள்ள பின்லாந்து தூதரகங்களை மூடுவதற்கு அந்நாட்டு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.