துவாரகா திருமலையில் மலைப்பாம்பை கழுத்தில் போட்டுப் பயமுறுத்திய போதைநிலை நபர் – வீடியோ வைரல்
ஆந்திரப்பிரதேசத்தின் துவாரகா திருமலையில், மலைப்பாம்பை கழுத்தில் அணிந்து பொதுமக்களை அச்சுறுத்திய போதைநிலையில் இருந்த நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
துவாரகா திருமலையில் உள்ள ஒரு ஏரியில், மீனவர்கள் வலைவீசி மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அவர்களின் வலையில் பெரிய மலைப்பாம்பு ஒன்று சிக்கியது. அதை கரை அருகே இழுத்துவிட்டு வைக்கும்போது, அங்கு வந்த போதை நபர், அந்த பாம்பை தடியால் அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
பின்னர், இறந்த மலைப்பாம்பை தனது கழுத்தில் போட்டு, சாலைகளிலும் சந்தைகளிலும் சுற்றி நடந்து, அங்கிருந்த மக்களை பயமுறுத்திய காணொளி தற்போது வைரலாகியுள்ளது.