வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற மெசேஜிங் செயலிகளை பயன்படுத்த, இனிமேல் செயல்பாட்டிலுள்ள சிம் கார்டு அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல் போன்ற மெசேஜ் பண்பாட்டுச் செயலிகளை பல கோடி மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இவை பொதுவாக, ஒருமுறை OTP மூலம் உள்நுழைந்தால், பின்னர் போனிலிருந்து சிம் கார்டை மாற்றினாலும், அகற்றினாலும் எந்த தடையும் இல்லாமல் தொடர்ந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் சிம் கார்டு இந்தியாவுக்கு வெளியே இருந்தாலோ, செயலிழந்திருந்தாலோ கூட பயன்பாட்டுகள் இயங்கிக் கொண்டிருப்பதால், அவை குற்றச் செயல்களில் பயன்படுத்தப்படுகின்றன என்ற புகார்கள் அதிகரித்து வந்தன.
இதற்கான தீர்வாக, இந்த செயலிகளை பயன்படுத்தும் ஒவ்வொரு மொபைல் போன்களிலும் செயல்பாட்டில் இருக்கும் சிம் கட்டாயம் என அரசு புதிய நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதியின் படி, பயனரின் சாதனத்தில் இருக்கும் சிம் கார்டு தொடர்ந்து செயல்பாட்டில் இருப்பது 90 நாட்கள் கொண்ட காலப்பகுதிக்குள் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், வாட்ஸ்அப் வலைத் தளத்தில் (Web Version) பயன்படுத்தும்போது, ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் தானாகவே லாக் அவுட் ஆகும் முறையும் விரைவில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.