ஆசியாவில் உயர்ந்த ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கோவாவில் அமைந்த 77 அடி உயரம் கொண்ட வெண்கல ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி புனிதமாக திறந்து வைத்தார்.
தெற்கு கோவா, கனகோனா பகுதியில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்த வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டு, இன்று பிரதிஷ்டை விழா நடைபெற்றது.
நொய்டாவைச் சேர்ந்த பிரபல சிற்பி ராம் சுதாரின் வழிகாட்டுதலில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
மட்டத்தின் 550வது ஆண்டு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி விழாவில் கலந்து, ராமர் சிலையை திறந்ததோடு, மடத்தால் உருவாக்கப்பட்ட ராமாயண தீம் பார்க் கார்டனையும் திறந்து வைத்தார்.