நெல்லூரில் பெருமளவு கஞ்சா மற்றும் கள்ளநாணயங்கள் கைப்பற்றி பரபரப்பு!
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில், போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அதிகளவு கஞ்சாவும், போலிநோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லூர் கிராமப்புற எல்லையில் ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர், சந்தேகத்திற்கிடமான சிலரை தடுத்து சோதனை செய்தனர். அப்போது, 23 கிலோ கஞ்சா மற்றும் 37 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், இந்த கஞ்சா ஒடிசாவிலிருந்து கடத்தப்பட்டதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.