டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னுடன் சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ள ஷாஹீன் ஷாஹித், தனது காதலி அல்ல; சட்டப்படி திருமணம் செய்த மனைவி என முசம்மில் அகமது விசாரணையின்போது தெரிவித்திருக்கிறார்.
கடந்த 10ஆம் தேதி டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிரமாக விசாரித்து வருகிறது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக அரியானா அல் பலா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பேராசிரியர் முசம்மில் ஷகீல் கனாயி, அனந்த்நாக்கில் பணியாற்றிய மருத்துவர் ஹதில் அகமது, லக்னோவை சேர்ந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹித் உட்பட 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணை அதிகாரிகளிடம் முசம்மில், ஷாஹீன் ஷாஹித் உடன் தனக்கான உறவு ‘காதலர்தோழ்மை’ அல்ல; இருவரும் 2023 செப்டம்பர் மாதத்தில் முறையான திருமண பந்தத்தில் இணைந்ததாக கூறி ஒப்புக்கொண்டுள்ளார்.