அலிசா ஹீலி சதம் – அரையிறுதிக்கு ஆஸ்திரேலியா!
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் வங்கதேசத்தை எதிர்த்து ஆஸ்திரேலியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 9 விக்கெட்களுக்கு 198 ரன்கள் எடுத்தது. சோபனா மோஸ்டரி 66, ரூபியா ஹைதர் 44 ரன்கள் சேர்த்தனர். ஆஸ்திரேலியா பக்கத்தில் கார்ட்னர், சுதர்லேண்ட், அலானா கிங், வேர்ஹாம் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.
பின்னர் 199 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 24.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் அலிசா ஹீலி 77 பந்துகளில் 113 ரன்களும், ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 84 ரன்களும் எடுத்தனர்.
இத்துடன் ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களில் 4 வெற்றியுடன் 9 புள்ளிகளை பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.