உலக கடன் நிலை: அமெரிக்கா முதலிடம் – இந்தியா எங்கே?

Date:

உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் வளர்ச்சியில் முன்னிலை வகித்தாலும், அவை கூட மிக அதிகளவு கடன் சுமையைச் சுமந்து வருகின்றன என்பதே அண்மை சர்வதேச மதிப்பீடுகள். இதை விளக்கும் ஒரு விரிவான செய்தி தொகுப்பு இது.

“கால் கஞ்சி குடித்தாலும் கடன் இல்லாமல் வாழ்பவன் சந்தோஷி” என்ற பழமொழி தனிநபருக்கு மட்டும் அல்லாமல் நாடுகளுக்கும் பொருந்தக்கூடியது. ஆனால் இன்றைய உலக சூழலில் கடன் இல்லாமல் இயங்குவது சாத்தியமா என்பதே பெரிய கேள்வி. உலகப் பொருளாதாரத்தின் இயங்குதளம் இன்று பெரும்பாலும் கடன் மூலமே நகர்கிறது.

ஒரு நாட்டின் நிதி நிலையும் பொருளாதார வளமும் எவ்வாறு இருக்கிறது என்பதற்கான முக்கியமான அளவுகோல்களில் ஒன்றாக பொதுக் கடன் மாறியுள்ளது. அரசின் செலவுகள், பொதுத்துறை சேவைகள், மக்களின் பாதுகாப்பு, வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றை நடத்த அந்தக் கடன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி, பல நாடுகள், தனிநபர் நிதி நிறுவனங்கள், மேலும் சர்வதேச சந்தைகளில் வெளியிடப்படும் அரசுப் பத்திரங்கள்—இவையெல்லாம் நாடுகளின் முக்கிய கடன் மூலங்கள். கடந்த ஆண்டு உலக அளவில் மொத்த பொதுக் கடன் 102 ட்ரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இது உலகின் மொத்த GDP-யின் 94.7% ஆகும்.

நிபுணர்கள் கணிப்பின் படி, இந்த ஆண்டு இறுதியில் அந்த அளவு 110.9 ட்ரில்லியனைத் தாண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் உலகக் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமான 102% அளவைத் தொட்டுவிடும் என்றும் முன்னறிவிப்பு கூறுகிறது.

வளரி்ற்ற நாடுகளின் மொத்த பொதுக் கடன் 31 ட்ரில்லியன் டாலராக இருந்தாலும், அது முன்னேற்றம் அடைந்த நாடுகளை விட இருமடங்கு வேகத்தில் உயர்ந்து வருவது கவனத்துக்குரியது.

அமெரிக்கா — உலகின் மிகப்பெரிய கடன் நாடு

உலகின் மிகப் பெரிய பொருளாதாரமான அமெரிக்காவின் GDP 30.51 ட்ரில்லியன் டாலர். ஆனால் அதன் கடன் சுமை 38.1 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. உலக அளவில் உள்ள அரசுக் கடனில் 34.5% சுமை அமெரிக்காவுக்கே.

கடந்த 25 ஆண்டுகளில் சீனாவின் அரசு சார்பான நிதி நிறுவனங்களிடமிருந்து அமெரிக்கா மிகப் பெருமளவில் கடன் பெற்றுள்ளது. சுமார் 2,500 திட்டங்களுக்கு மட்டும் 200 பில்லியன் டாலருக்கு மேற்பட்ட கடன் சீனாவிடம் இருந்து வாங்கப்பட்டுள்ளது.

சீனா – இரண்டாவது இடம்

19.23 ட்ரில்லியன் டாலர் GDP-யுடன் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் சீனாவின் பொதுக் கடன் 16.98 ட்ரில்லியன் டாலர். இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு கடன் வழங்கும் நாடாகவும் சீனா பிரபலமானது.

ஜப்பான் – மூன்றாவது இடம் (ஆனால் கவலைக்குரிய கடன்–GDP விகிதம்)

ஜப்பானின் அரசுக் கடன் உலகளவில் 8.9% பங்கு கொண்டுள்ளது. ஆனால் அதன் கடன்–GDP விகிதம் மிக மோசமான 229.6% ஆக உள்ளது. அதாவது, ஜப்பானின் கடன் அதன் பொருளாதாரத்தை விட இரண்டு மடங்கு அதிகம்.

இந்தியா — 7வது இடம் (நிலையான கடன் நிலை)

இந்தியா மொத்த உலகக் கடனில் 3% பங்குடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் கடன்–GDP விகிதம் 81.4%. இது அமெரிக்கா (125%) மற்றும் இத்தாலி (136.8%) போன்ற முன்னேற்ற நாடுகளை விட மிகவும் குறைவு.

இதனால், இந்தியாவின் பொருளாதாரம் மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது நிலையானது என்றும், நாட்டின் கடன் அளவு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். மேலும், இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருந்து விரைவில் மூன்றாவது இடத்தை அடையும் என்றும் நாடுகளின் பொருளாதார ஆய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

கடனின் நன்மை–தீமை

கடன் நாட்டின் வளர்ச்சிக்கு உதவினாலும், அது அளவுக்கு மீறினால் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். மிக வலுவான பொருளாதாரங்களையும் கடன் நொடியில் சிதற்றும் சக்தி கொண்டது.

இந்த பட்டியல் உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளும் தங்கள் வளர்ச்சியைத் தாங்க கடன் மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகிறது. அதிகப்படியான கடன் பொருளாதாரத்தை தளர்த்தக்கூடும் என்று சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு தலைமை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது!

நடிகர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்த முன்னாள் அமைச்சர்...

வடியாத மழைநீர்… வளம் குன்றும் வயல்கள்… வாடும் விவசாயிகளின் மனவேதனை!

வடகிழக்கு பருவமழை பலத்தடிப்பதால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் தொடர்ச்சியான மழை பெய்து...

தூய்மை பணியாளர்களை புறக்கணிக்கிறது திமுக அரசு: உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி விமர்சனம்

தூய்மை பணியாளர்களை புறக்கணிக்கிறது திமுக அரசு: உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர்...

ஒரே நாடு – ஒரே தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர்களுக்கு நாடாளுமன்ற குழுவின் அழைப்பு

ஒரே நாடு, ஒரே நேர தேர்தல் நடைமுறைக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை...