பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில் கொல்லப்பட்டார்? – நாடு முழுவதும் அதிர்ச்சி!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறைக்குள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இம்ரான்கான் தனது பிரதமர் காலத்தில் சமர்ப்பிக்க வேண்டிய அன்பளிப்புகளை அரசுக்குச் சேர்க்காமல் தனிப்பட்ட முறையில் விற்று செல்வம் சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதன் பேரில் அவர் அடியாலா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக, அவரை சந்திக்க உறவினர்களுக்கும், அவருடைய கட்சித் தலைவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நேரத்தில், சிறைச்சாலைக்குள் ராணுவத்தினரால் இம்ரான்கான் கொல்லப்பட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும், இம்ரான்கானைப் பார்ப்பதற்காக வந்த அவரது சகோதரிகள் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவை குறித்து பாகிஸ்தான் அரசு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கவில்லை.