தங்கம் ஒரு பவுன் ரூ.95,000 தாண்டியது – வரலாறு காணாத புதிய உச்சம்!
சர்வதேச பொருளாதார மாற்றங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வருகிறது.
செப்டம்பர் 6 அன்று ஒரு பவுன் தங்கம் ரூ.80,040 ஆக இருந்த நிலையில், அக்டோபர் 7 அன்று அது ரூ.90,400 ஆக உயர்ந்தது. அதன்பின் தொடர்ந்து ஏற்பட்ட மாற்றங்களால், நேற்று சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் விலை ரூ.95,000-ஐத் தாண்டி, புதிய உச்சத்தை எட்டியது.
நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.11,900-ஆக இருந்தது. மேலும், 24 காரட் தங்கம் விலை ரூ.1.03 லட்சம் என பதிவாகியுள்ளது.
தங்க விலை உயர்வுக்கு காரணமாக,
- அமெரிக்கா எச்-1பி விசா கட்டண உயர்வு,
- டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, மற்றும்
- அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது ஆகியவை குறிப்பிடப்படுகின்றன.
இதே நேரத்தில், வெள்ளி விலையில் சிறிய அளவு குறைவு பதிவாகியுள்ளது. கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.206, கட்டி கிலோவுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.2.06 லட்சம் என விற்பனை செய்யப்பட்டது.