அமெரிக்காவுடன் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலைக்கிடையில், வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ நடனமாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அமெரிக்கா–வெனிசுலா உறவில் பல ஆண்டுகளாக முரண்பாடுகள் நீடித்து வருகின்றன. போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் பசிபிக் மற்றும் கரீபியன் கடல் பகுதிகளில் சந்தேகப்படும் கப்பல்களுக்கு அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மதுரோ கடுமையாக மறுத்துள்ளார்.
இதன் பின்னணியில், “போர் வேண்டாம், அமைதி வேண்டும்” என்ற அமைதிக் கோரிக்கையை முன்னிறுத்தும் நிகழ்வில் மதுரோ ஆடிய நடன காட்சியே தற்போது இணையத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.