26/11 போன்ற கொடூரத் தாக்குதல் இனி ஒருபோதும் நிகழக்கூடாது : நாடே ஒன்றுபட்டு எடுத்த தீர்மானம்!

Date:

மும்பையில் படகில் வந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு 17 ஆண்டுகள் கடந்துவிட்டாலும், அந்த துயர நினைவிலிருந்து இன்னும் மீள முடியாமல் பலர் வாழ்ந்து வருகின்றனர். இதுகுறித்த சுருக்கமான தகவல்கள் இங்கே.

2008 நவம்பர் 26—இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பையை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கிய நாள். 1993 மும்பை தொடர் குண்டு வெடிப்புக்குப் பிறகு இந்தியா சந்தித்த மிகக் கொடிய பயங்கரவாதச் சம்பவமாக இது வரலாற்றில் பதிந்துள்ளது.

கடல் வழியாக மறைமுகமாக மும்பை கரைக்கு வந்த லஷ்கர்–இ–தொய்பா அமைப்பைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள், தாஜ்மஹால் மற்றும் ஓபராய் ஹோட்டல்கள், சத்ரபதி சிவாஜி மகாராஜ் டெர்மினஸ், நாரிமன் ஹவுஸில் உள்ள யூத மையம், காமா மருத்துவமனை, மெட்ரோ சினிமா, லியோபோல்ட் கஃபே போன்ற அத்தியாவசிய பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர்.

நான்கு நாள் நீடித்த இக்கட்டான சூழ்நிலையில், 9 பயங்கரவாதிகள் உயிரிழந்ததுடன், 15 போலீஸ் பணியாளர்கள், 2 என்எஸ்ஜி வீரர்கள், 29 வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 166 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் மட்டும் உயிருடன் பிடிபட்ட ஒரே பயங்கரவாதி — சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் துப்பாக்கிச் சூடு நடத்திய அஜ்மல் கசாப்.

உதவி சப்-இன்ஸ்பெக்டர் துக்காராம், தன் உயிரையே தியாகம் செய்து கசாப்பை பிடித்தார். 2010ல் நீதிமன்றம் கசாப்புக்கு மரண தண்டனை வழங்கியது. 2012ல் அவர் தூக்கிலிடப்பட்டார்.

இந்த தாக்குதலின் சாட்சிகளும், அன்புக்குரியவர்களை இழந்தவர்களும், இன்றுவரை அந்த படுகொலைக்கான வலியை மறக்க முடியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளில் மிக இளம் வயதில் சாட்சியம் அளித்தவர் — அப்போது 9 வயது சிறுமி தேவிகா. மும்பை சிஎஸ்டி ரயில் நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் காலில் சுட்டு காயமடைந்த அவர், ஆறு அறுவைச் சிகிச்சைகள் முடித்து 65 நாட்கள் மருத்துவமனையில் இருந்து மீண்டார்.

அப்போது “பெரியவளான பிறகு IPS ஆகி நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றுவேன்” என்ற அவரது கனவு இன்று நனவாகியுள்ளது.

தற்போது காவல்துறை அதிகாரியாக பணியாற்றும் அவர், சமூக வலைதளங்களில் தனது பெயருடன் “தேவிகா ரோட்டவன் 26/11 — மும்பை தாக்குதலில் உயிர் தப்பிய மிக இளையவர்” என்று குறிப்பிடுகிறார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் உறுதியைக் காட்டும் வகையில், “இனி ஒருபோதும் இல்லை” (Never Ever Again) என்ற கருப்பொருளின் கீழ், மும்பை 26/11 தாக்குதலின் 17வது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி டெல்லி இந்தியா கேட்வேயில் தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்டது.

சேதமில்லா நாட்டுக்காக தங்கள் உயிரை அர்ப்பணித்த போலீசார் மற்றும் பொதுமக்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றியும் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் நினைவாக ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகளின் மெழுகை கொண்டு, 26/11 வீரமரணம் அடைந்தோருக்காக “வாழும் நினைவுச் சின்னம்” (Living Memorial) உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‘டிட்வா’ புயல்: பாம்பனில் கடல் சீற்றம், வீடுகள் சேதம்

‘டிட்வா’ புயல்: பாம்பனில் கடல் சீற்றம், வீடுகள் சேதம் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில்,...

போர் விமான இன்ஜின்களில் தன்னிறைவு பெறும் இந்தியா: ஹைதராபாதில் சாஃப்ரான் MRO மையம் தொடக்கம்

போர் விமான இன்ஜின்களில் தன்னிறைவு பெறும் இந்தியா: ஹைதராபாதில் சாஃப்ரான் MRO...

“ஆபரேஷன் சிந்தூரை விட கடுமையான தாக்குதல் எதிர்கொள்ள நேரிடும்” – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் திடீர் எச்சரிக்கை

“ஆபரேஷன் சிந்தூரை விட கடுமையான தாக்குதல் எதிர்கொள்ள நேரிடும்” – பாகிஸ்தானுக்கு...

பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றப்பட்ட தமிழகத்தில் திமுக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் – நயினர் நாகேந்திரன்

பெண்கள் பாதுகாப்பற்ற மாநிலமாக மாற்றப்பட்ட தமிழகத்தில் திமுக ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும்...