“பயங்கரவாதம் முன் இந்தியா ஒருபோதும் குனியாது” – பிரதமர் மோடி உறுதி
பயங்கரவாதத்திற்கு முன் இந்தியா எக்காரணம் கொண்டும் தலை குனியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் குருஷேத்திரத்தில், சீக்கிய குரு தேஜ் பஹதூரை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பு நாணயம் மற்றும் தபால் தலை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை வெளியிட்டார்.
பின்னர் உரையாற்றிய அவர், இந்தியா எப்போதும் சமாதானத்தையே விரும்பும் நாடாக இருப்பினும், பயங்கரவாதத்துக்கு முன் ஒருபோதும் தலை வணங்காத நாடாக இருப்பதை “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின் போது உலகமே பார்த்தது என்றார்.
இந்தியா தன்னுடைய முழு வலிமை, தைரியம் மற்றும் முனைப்புடன் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று அவர் பெருமையுடன் குறிப்பிட்டார்.