உலகம் முழுவதும் 10 நிமிடத்திற்கு ஒரு பெண் கொலை—ஐ.நா அதிர்ச்சி அறிக்கை

Date:

பெண்கள் மீது நடைபெறும் வன்முறை உலகளவில் அதிகரித்து வரும் நிலையில், ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒருவரை கொலை செய்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை ஐக்கிய நாடுகள் அவை வெளியிட்டுள்ளது. சராசரியாக தினமும் 137 பெண்கள் உயிரிழக்கின்றனர் என்று அறிக்கை தெரிவிக்கிறது.

2024 ஆம் ஆண்டில் மட்டும் 83,000 பெண்களும் இளம் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதில் சுமார் 50,000 பேர் அவர்களது பெற்றோர், சகோதரர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களால் கொல்லப்பட்டிருப்பது கவலைக்குரியது என்று ஐ.நா கூறியுள்ளது.

இந்தக் கொலைகளுக்கான முக்கியமான காரணமாக பாலின சமத்துவமின்மையே முதன்மையாக உள்ளது என்று ஐ.நா விளக்கியுள்ளது. அதோடு, இடம்பெயர்வு, பொருளாதார நிலை தடுமாற்றம், பாதுகாப்பு அமைப்புகளின் பலவீனம், இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் உருவாகும் பிரச்சினைகள் ஆகியவை கூடுதல் காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

2024இல் ஆப்பிரிக்கா பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான பெண் கொலைகள் நிகழ்ந்துள்ளன. அங்கு மட்டும் 22,600 பெண்கள் பாதிக்கப்பட்டதாக ஐ.நா மதிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பல்லாவரம் பகுதியில் எஸ்ஐஆர் படிவம் வழங்கலில் கோளாறு – மக்கள் அதிருப்தி!

சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர்...

பாகிஸ்தானின் சதி முயற்சியை தடை செய்த சிஐஎஸ்எப் வீரர்களுக்கு உயரிய பாராட்டு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, உயிரைப் பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்தத்...

20 லட்சம் வாக்காளர்களை அடைய முடியாமல் தடுமாறும் வாக்குச்சாவடி அலுவலர்கள்!

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் வாக்காளர் விபர திருத்தப் பணியில், சுமார் 20...

கூட்டு பட்டாவில் இனி வாரிசுகள் பெறும் சொத்து பங்கு தெளிவாக குறிப்பிடப்படும்: வருவாய்த்துறை

வாரிசுகளுக்கான கூட்டு பட்டா வழங்கும் முறையில் மாற்றம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக...