டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில், பிரதமர் அலுவலகம் முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளது. தலைநகரில் காற்றுத் தரம் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளர் முன்னிலையில் இந்த அவசரக் கூட்டம் நடைபெற்றது.
டெல்லியில் இன்னும் சுமார் 37% BS3 தர வாகனங்கள் சாலையில் ஓடிக் கொண்டிருக்கின்றன என்ற தகவல் வெளியாகியதைத் தொடர்ந்து, அந்த விடயமும் கூட்டத்தில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
மாசு உமிழும் பழைய வாகனங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த மாநில அரசு அதிகாரிகளுக்கு இந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மின்சார வாகனங்களை அதிகம் ஊக்குவித்து காற்று மாசை கட்டுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் அரசும் தனியார் நிறுவனங்களும் 50% பணியாளர்களை ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் மாற்றியுள்ள சூழலில், காற்று மாசு பிரச்சனையை சமாளிக்க பிரதமர் அலுவலகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.