பாலிவுட் நடிகையும் முன்னாள் மிஸ் இந்தியாவுமான செலினா ஜெட்லி, தனது கணவரால் நடைபெற்றதாக கூறப்படும் வன்முறைக்கு எதிராக 50 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பல திரைப்படங்களில் நடித்துத் தனக்கென பெயர் பெற்ற செலினா ஜெட்லி, 2010 ஆம் ஆண்டு பீட்டர் ஹாக்கை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தம்பதியருக்குள் ஏற்பட்ட பிரச்சனைகளின் பின்னர், தனது கணவருக்கு எதிராக குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்து, பெரும் தொகையான இழப்பீட்டையும் கோரியுள்ளார்.
கணவரின் நடவடிக்கைகளால் தாம் கடுமையான உணர்ச்சி பாதிப்பு மற்றும் உடல் மனநல துன்பங்களுக்கு ஆளானதாகவும் செலினா புகார் அளித்துள்ளார்.