அயோத்தி கோயிலில் ராமராஜ்யத்தின் கொடி ஏற்றப்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் தலைமைச் செயலாளர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கோவிலில் கூடிருந்த பக்தர்களைச் சந்தித்து உரையாற்றிய அவர், இன்று அனைவருக்கும் நிறைவு மற்றும் பேரானந்தம் தரும் நாள் எனவும், இதற்காக எண்ணற்றோர் தங்கள் உயிரை அர்ப்பணித்துள்ளதாகவும் கூறினார். அந்த வீரர்களின் ஆன்மாக்கள் அனைத்தும் இன்று நிம்மதியை அடைந்திருக்கும்; குறிப்பாக அசோக் சிங்கால் இன்று அமைதியில் இருப்பார் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலகிற்கு அமைதியின் செய்தியை வழங்கும் ராமராஜ்யத்தின் கொடி கோயிலின் கோபுரத்தில் ஏறியுள்ளது என்றும், நூற்றாண்டுகள் நீண்ட பாடுபாட்டைத் தாண்டி, இத்தலத்தை அடைய 30 ஆண்டுகள் போராட்டம் மேற்கொள்ள வேண்டி வந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.