இந்தி திரையுலகின் பிரபலமான மற்றும் போர்வீரனென போற்றப்பட்ட மூத்த நடிகர் தர்மேந்திரா உடல்நலக் குறைவு தீவிரமடைந்து காலமானார். அவரது மரணம் குறித்து திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதய நோய் மற்றும் சுவாசக்குறைபாடு காரணமாக மும்பையின் ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் பல நாட்களாக சிகிச்சை பெற்றுவந்தார். சில நாட்களுக்கு முன் அவர் வெண்டிலேட்டர் உதவி பெறுவதாக தகவல்கள் வெளியானதும், ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதற்கு பின்னர், அவர் நிலைமை ஸ்திரமாக உள்ளது என அவரது மனைவி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி, மகள் நடிகை ஈஷா தியோல் ஆகியோர் விளக்கம் அளித்தனர். சிகிச்சைக்கு பதிலளித்ததால் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆனால் வீட்டில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த தர்மேந்திராவின் உடல்நிலை திடீரென மேலும் மோசமடைந்து உயிரிழந்தார்.
இந்த செய்தி வெளியாகிய உடனேயே பாலிவுட் உலகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மறைந்த நட்சத்திரத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.