சபரிமலை தங்கத் தகடு திருட்டு வழக்கின் விசாரணையில் முன்னேற்றம் காணப்படும் நிலையில், நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் தங்கத் தகடுகளை சீரமைப்பு செய்ய சென்னைக்கு கொண்டு வந்தபோது அவை திருடப்பட்ட விவகாரம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.
வழக்கில் கைது செய்யப்பட்ட உன்னிகிருஷ்ணன் போத்தி, உண்மையான தங்கத் தகடுகளை உருக்கி சென்னையில் விற்றதுடன், அதன் மாற்றாக தங்கமுலாம் பூசப்பட்ட போலி தகடுகளை வைத்திருந்தது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
மேலும் விசாரணையை தீவிரப்படுத்திய புலனாய்வு குழு, உன்னிகிருஷ்ணன் விற்ற தங்கத் தகடுகள் நடிகர் ஜெயராமிடம் சென்றிருக்கலாம் என்பதை உறுதி செய்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் வசிக்கும் நடிகர் ஜெயராமை நேரடியாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு திட்டமிட்டுள்ளது.