அர்ஜுன் தாஸ் மற்றும் சாண்டி முக்கிய வேடங்களில் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படத்தின் முதல் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ படத்தை உருவாக்கிய சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம், அர்ஜுன் தாஸின் புதிய படத்தையும் தயாரிக்கிறது.
விக்னேஷ் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில், நடிகை தேஜு அஷ்வினி மற்றும் சாண்டி முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகிறார்கள்.
படக்குழு தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பு ஆகியவற்றை வெளியிட்டுள்ளது. ‘சூப்பர் ஹீரோ’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்துக்கு ஹஷீம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ளது.