பாக்–ஆப்கன் இடையே 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம்
தெஹ்ரிக்-இ-தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் தாக்குதல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டி, அவர்களுக்கு ஆப்கானிஸ்தானில் பயிற்சி அளிக்கப்படுவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியது. இதையடுத்து, பாகிஸ்தான் கடந்த வாரம் ஆப்கன் எல்லைப் பகுதிகளில் குண்டுவீச்சு நடத்தியது.
அதற்கு பதிலடியாக ஆப்கன் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, காந்தகார் மாகாணத்தில் பாகிஸ்தான் படைகள் நேற்று காலை நடத்திய தாக்குதலில் 12 ஆப்கன் குடிமக்கள் பலியாகியுள்ளனர்; மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பதில் தாக்குதலாக ஆப்கன் படைகள் நடத்திய தாக்குதலிலும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையிலில், பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் 48 மணி நேரத்துக்கு தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.