நியூயார்க் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சோக்ரான் மம்தானி-க்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நகைச்சுவை போல் நடந்த சம்பவம் இணையத்தில் பரவி வருகிறது.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுடன் சந்தித்த நியூயார்க் மேயர், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார். அப்போது, “நீங்கள் பாசிஸ்ட் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுந்தது.
உடனடியாக பதிலளித்த ட்ரம்ப், தன்னை “பாசிஸ்ட்” என்று அழைக்கலாம், அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை என்று கூறினார். அவரது நகைச்சுவைமிக்க இந்த பேச்சின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்கள் பரபரப்பாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.