டெல்லியில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலை நடத்திய உமர் நபி தொடர்பான விசாரணையில், அவர் துருக்கியில் 20 நாட்கள் தங்கி பயங்கரவாத அமைப்பினரை நேரடியாக சந்தித்து பேசியது என்ஐஏ விசாரணையில் அம்பலமானது.
2022-ல் நடந்த ரகசிய பயணம்
கடந்த 2022ஆம் ஆண்டு, உமர் நபி துருக்கிக்கு பயணம் செய்துள்ளார். அங்கு அவர், சர்வதேச ரீதியில் செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களை நேரடியாக சந்தித்து ஆலோசனைகள் நடத்தியதாக NIA அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
உமருடன் சென்றவர்கள்
இந்த பயணத்தின் போது உமர் நபியுடன் மேலும் 2 பேர் பயணம் செய்துள்ளனர்:
- முஷாம்மில் ஷாகீல் கனாய்
- கைது செய்யப்பட்ட அதீல் அகமது ராதரின் சகோதரர் முஷாபர் ராதர்
இவர்கள் மூவரும் துருக்கியில் பயங்கரவாத தொடர்புடைய நபர்களுடன் ரகசிய சந்திப்புகளில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சந்திப்பை ஏற்பாடு செய்தவர் யார்?
இந்த சந்திப்பை பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி உகாஷா ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்து கொடுத்ததாக NIA விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்த புதிய தகவலால், டெல்லி தற்கொலைப்படை தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சர்வதேச நெட்வொர்க், நிதி ஆதரவு, பயிற்சி தொடர்பான அம்சங்கள் குறித்து NIA மேலும் விரிவான விசாரணையை நடத்தி வருகிறது.