வெள்ளித்திரையில் வசூல் புயல் எழுப்பும் ‘காந்தா’!
மொத்த வசூல் விவரங்களுடன் ‘காந்தா’ திரைப்படம் நான்கு நாட்களில் சாதனை படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மலையாளத் திரைப்பட துறையின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் நடித்த காந்தா கடந்த 14ஆம் தேதி வெளியானது. வெளியான முதல்நாட்களிலேயே படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
படக்குழுவின் தகவல்படி, முதல் மூன்று நாட்களிலேயே 28 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து, படத்திற்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.