SIR நடவடிக்கைகளுக்கு அனைத்து குடிமக்களும் பூரண ஆதரவு வழங்க வேண்டும்
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எஸ்.ஐ.ஆர் பணிகளை முழுமையாக ஆதரிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் நடைபெற்ற 61வது எல்லை பாதுகாப்புப் படை எழுச்சி தின விழாவில் கலந்து கொண்ட அவர், நாட்டின் எல்லைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஜனநாயக அமைப்பை காக்கவும் ஊடுருவலை தடுப்பது மிக முக்கியம் என்றார்.
சில அரசியல் கட்சிகள், ஊடுருவலைத் தடுக்க அரசாங்கம் மேற்கொள்ளும் செயல்பாடுகளை தளர்த்தும் வகையில் செயல்படுகின்றன என்பதையும் அவர் விமர்சித்தார்.