இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் – கேமரூன் கிரீன் விலகல்; மார்னஸ் லபுஷேன் அணியில்

Date:

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் – கேமரூன் கிரீன் விலகல்; மார்னஸ் லபுஷேன் அணியில்

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அனுபவமிக்க பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஷேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடருக்காக தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளது. தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.

தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் கேமரூன் கிரீன் இடம்பெற்றிருந்தார். ஆனால் இடுப்பு தசையில் ஏற்பட்ட பிடிப்பு காரணமாக அவர் தொடரிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக அவருக்கு ஓய்வு அளிக்கும் முடிவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

இதனையடுத்து, சிறந்த பார்மில் உள்ள மார்னஸ் லபுஷேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஷெப்ஃபில்டு ஷீல்டு உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் குயின்ஸ்லாந்து அணிக்காக விளையாடிய லபுஷேன், அக்டோபர் 16ஆம் தேதி சதம் அடித்திருந்தார். இது இந்த சீசனில் அவரது நான்காவது சதமாகும். அவரது நல்ல பேட்டிங் நிலையை கருத்தில் கொண்டு அவர் மீண்டும் தேசிய அணியில் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இது மூன்றாவது மாற்றமாகும்.

மேலும், ஆடம் ஸம்பா, அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்லிஷ் ஆகியோர் முதல் ஆட்டத்தை தவிர்த்து, கடைசி இரண்டு ஆட்டங்களில் விளையாடுவார்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்கூட்டியே அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மேத்யூ ரென்ஷா, மேத்யூ ஷார்ட், மேத்யூ குனேமன், மிட்செல் ஸ்டார்க், சேவியர் பார்ட்லெட், கூப்பர் கோனொலி, பென் டுவார்ஷுயிஸ், நேதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக் கூடாது” – அண்ணாமலை அதிரடி பேச்சு!

“வழிபாட்டு முறைகளில் அரசு தலையிடக் கூடாது” - அண்ணாமலை அதிரடி பேச்சு! சென்னை:...

“பெட்ரோல், டீசல் விலை உயராது” – ஈரான் போருக்கு மத்தியிலும் மத்திய அரசு அதிரடி உறுதி!

“பெட்ரோல், டீசல் விலை உயராது” - ஈரான் போருக்கு மத்தியிலும் மத்திய...

“அரசு மருத்துவமனையையே வீடாக மாற்றிய திமுக நிர்வாகி” – அண்ணாமலை காட்டம்!

“அரசு மருத்துவமனையையே வீடாக மாற்றிய திமுக நிர்வாகி” - அண்ணாமலை காட்டம்! சென்னை:...

ஊத்தங்கரை அருகே கொடூரம்: முதியவர் அடித்துக் கொலை – மூதாட்டிக்கு நேர்ந்த பயங்கரம்!

ஊத்தங்கரை அருகே கொடூரம்: முதியவர் அடித்துக் கொலை - மூதாட்டிக்கு நேர்ந்த...