லண்டனில் உள்ள வடிவமைப்பு அருங்காட்சியம், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் வெஸ் ஆண்டர்சனின் தனித்துவமான சினிமா உலகத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மிகப்பெரிய கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்துள்ளது.
Bottle Rocket, The Royal Tenenbaums, Fantastic Mr. Fox, The Grand Budapest Hotel போன்ற பல படங்கள் மூலம் கவனம் பெற்றவர் அமெரிக்க இயக்குநர் வெஸ் ஆண்டர்சன். இயக்குநராக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழும் அவர், கடந்த 30 ஆண்டுகளாக தனக்கேயுரிய காட்சிப்படுத்தும் பாணியில் பல விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படைப்புகளை உருவாக்கி வருகின்றார்.
அவரின் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட 700-க்கும் மேற்பட்ட அரிய பொருட்கள் தற்போது லண்டனின் Design Museum-ல் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில், ரால்ப் ஃபியன்னெஸ், டில்டா ஸ்விண்டன் போன்ற முன்னணி நடிகர்கள் அணிந்த அசல் ஆடைகள், மேலும் The Life Aquatic with Steve Zissou, Asteroid City உள்ளிட்ட படங்களில் பயன்படுத்தப்பட்ட தனிப்பட்ட கலைப்பொருட்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த சிறப்பு கண்காட்சியை ஆண்டர்சனின் ரசிகர்களும், திரைப்பட கலை ஆர்வலர்களும் மிகுந்த உற்சாகத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.