பாஜக நாடு முழுவதும் தனது சட்டமன்ற உறுப்பினர்கள் (எம்எல்ஏ) எண்ணிக்கையை 1,800 ஆக உயர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அடிப்படையாக கடந்த 10 ஆண்டுகளில் கட்சியின் இடைவிடாத வளர்ச்சி குறிப்பிடத்தக்கதாக முன்னிறுத்தப்படுகிறது.
பாரம்பரிய அடிப்படையிலான கட்சிகளை விட, போராட்டங்களாலும், வளர்ச்சி சார்ந்த பணிகளாலும் மக்கள் ஆதரவை பெற்றுவந்த கட்சி தான் பாஜக எனவும், ஒரு மரபைச் சார்ந்த கட்சியல்லாது உழைப்பைத் தழுவி முன்னேறியதால்தான் எதிர்காலம் பாஜகக்கே சொந்தம் எனவும் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.
சுட்டிக் காட்டப்பட்ட புள்ளிவிவரங்கள்
பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 2014 முதல் தொடர்ந்து உயர்ந்து வருவதை கட்சி வட்டாரங்கள் எடுத்துக்கூறின. கடந்த 12 ஆண்டுகளில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை இவ்வாறு உயர்ந்ததாக தெரிவித்தனர்:
- 2014 – 1,035
- 2015 – 997
- 2016 – 1,053
- 2017 – 1,365
- 2018 – 1,184
- 2019 – 1,160
- 2020 – 1,207
- 2021 – 1,278
- 2022 – 1,289
- 2023 – 1,441
- 2024 – 1,588
- 2025 – 1,654
கட்சியின் தகவலின்படி, இதே முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு மாநில அளவிலான அமைப்புகளை வலுப்படுத்தி, வரவிருக்கும் தேர்தல்களில் மேலும் பல தொகுதிகளை கைப்பற்றும் வகையில் பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
பாஜக வட்டாரங்கள், “இந்த வளர்ச்சி விகிதத்தை கருத்தில் கொண்டு, அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை 1,800-ஆக உயர்த்துவது எட்டக்கூடிய இலக்காகும்” என்று தெரிவித்தனர்.