சென்னையில் கியூபா திரைப்பட விழா தொடக்கம் – இரண்டு நாள்கள், நான்கு படங்கள் திரையிடல்

Date:

இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் ஏற்பாட்டில், கியூபா திரைப்படங்களுக்கான சிறப்பு விழா சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்று வருகிறது. கியூபாவின் திரைப்பட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நவீன சினிமா பாணிகளை தமிழ்நாட்டு பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் இந்த விழா நடத்தப்படுகிறது.

நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் இந்த விழாவில் மொத்தம் நான்கு முக்கிய கியூபா திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. முதல் நாளான நவம்பர் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்கு, இயக்குனர் அலெஜாண்ட்ரா கில் இயக்கிய ‘AM–PM’ படம் திரையிடப்பட்டது. அதன் பின்னர் இரவு 7 மணிக்கு பெர்னாண்டோ பெரேஸ் இயக்கிய ‘Martí, The Eye of the Canary’ (மார்டி, த ஐ ஆஃப் த கன்ட்ரி) திரைப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.

கியூபாவின் கலாச்சாரத்தையும், அரசியல் வரலாற்றையும் சினிமா மூலம் அனுபவிக்க விரும்பும் பார்வையாளர்களுக்கு இந்த விழா சிறந்த வாய்ப்பாக உள்ளது. இரண்டாம் நாளான நவம்பர் 21-ஆம் தேதி மேலும் இரண்டு கியூபா திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

இந்த விழாவை சினிமா ஆர்வலர்கள், கலைஞர்கள், மாணவர்கள் என பலர் ஆர்வத்துடன் வரவேற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாமக்கல் தவெக கூட்ட நெரிசல் வழக்கு: ஏஎஸ்பி, காயமுற்ற தாய்–மகளிடம் சிபிஐ விசாரணை

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சார...

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் இடிப்பு – 102 ஏக்கரில் அதிநவீன ‘விளையாட்டு நகரம்’ உருவாக்கும் மத்திய அரசுத் திட்டம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் விரைவில் இடிக்கப்பட உள்ளது. நாட்டின்...

எஸ்ஐஆர் பட்டியல் திருத்தத்தில் அரசியல் தலையீடு ஏற்க முடியாது: மாநிலம் முழுவதும் தவெக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

தமிழக வாக்காளர் பட்டியலில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர திருத்தப் பணியை...

பழம்பெரும் நடிகர் எஸ். எஸ். சிவசூரியன் நூற்றாண்டு தொடக்க விழா: நடிகர் வரலாற்றை நினைவுகூறும் சிறப்புவிழா

தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான குணசித்திர நடிகராகப் பெயர் பெற்ற எஸ்....