ஜப்பானின் குமாமோட்டோ நகரில் ஜப்பான் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில், உலக தரவரிசையில் 15ஆம் இடத்தில் உள்ள இந்திய வீரர் லக்ஷயா சென், 26ஆம் இடத்தில் இருக்கும் ஜப்பான் வீரர் கோகி வத்தனாபேவை எதிர்கொண்டார்.
29 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில், லக்ஷயா சென் 21–12, 21–16 என்ற நேரடி செட்களில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.