‘சீதாராமம்’ படத்தை வெற்றிகரமாக இயக்கிய ஹனு ராகவபுடி, அடுத்ததாக உருவாக்கும் ‘ஃபவுஸி’ படத்தில் பிரபாஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் மிதுன் சக்கரவர்த்தி, ஜெயப்பிரதா, இயான்வி போன்றோர் முக்கிய வேடங்களில் தோன்றுகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை அமைப்பது விஷால் சந்திரசேகர்.
வரலாற்றுச் சூழலை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில், பிரபாஸ் ஒரு போர்வீரராக களமிறங்குகிறார். பான்-இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘ஃபவுஸி’யின் தலைப்பு போஸ்டர் கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்டது.