உத்தரப் பிரதேசத்தில், தனது மனைவியைப் பந்தயம் வைத்து சூதாடிய கணவனுக்கு எதிராக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த தகவலின்படி:
“மீரட்டின் கிவாய் கிராமத்தைச் சேர்ந்த டானிஷை, கடந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி திருமணம் செய்தேன். திருமணத்திற்குப் பிறகு சில நாட்களிலேயே, அவர் மதுபோதையில் என்னை பந்தயமாக வைத்து சூதாடத் தொடங்கினார். நான் அதை எதிர்த்து பேச முயன்றபோது, அவர் மட்டுமல்லாமல் என் மாமியாரும் சேர்ந்து என்னை தாக்கினர்,” என்று கூறியுள்ளார்.