இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
உலக தரவரிசையில் முன்னிலை வகிக்கும் முதல் 8 வீரர்கள் இதில் பங்கேற்று, ரவுண்ட் ராபின் வடிவில் தோராயமாக ஆட்டங்களை ஆடி வருகின்றனர். இந்தச் சுற்றில், ஸ்பெயினை சேர்ந்த கார்லோஸ் அல்கராஸ் தனது இரண்டாவது போட்டியில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃபிரிட்ஸை எதிர்கொண்டார்.