மலையாள நடிகை ஹனி ரோஸ், தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, கந்தர்வன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். மேலும் தெலுங்கு திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
இப்போது அவர் ‘ரேச்சல்’ என்ற பான்–இந்தியா படத்தில், மாட்டிறைச்சி வெட்டும் பெண் என்ற வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ஆனந்தினி பாலா இயக்கியுள்ள இந்த படத்தில் ராதிகா ராதாகிருஷ்ணன், பாபுராஜ், சந்து சலீம்குமார், ஜாபர் இடுக்கி, வினீத் தட்டில், ரோஷன் பஷீர் போன்ற பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஹனி ரோஸ், மலையாளத் திரைப்படத் துறையிலிருந்து தன்னை ஒதுக்கி வைக்கும் நிலை தொடர்கிறது என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.