ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாதிற்கு தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக அளித்த பிறகு, அதற்குப் பதிலாக ரோகிணி ஆச்சார்யா அரசியல் பலன் மற்றும் பணம் பெற்றார் என்று அவரின் சகோதரர் தேஜஸ்வி தெரிவித்து வந்தார்.
இதைத் தொடர்ந்து, ரோகிணி தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
“லாலுவைப் பயன்படுத்தி செயற்கையான இரங்கலை வெளிப்படுத்துவதைக் கைவிடுங்கள். அதன் பதிலாக, மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக தவிக்கும் ஏராளமான ஏழை நோயாளிகளுக்காக நீங்கள் அனைவரும் சிறுநீரக தானத்திற்கு முன்வருங்கள். லாலுவைக் குறித்து உண்மையான பாசம் இருந்தால், அவர் பெயரில் சிறுநீரக தான செயலில் ஈடுபடுவீர்கள்”
என்று கடுமையாக பதிலளித்துள்ளார்.