துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படம் நவம்பர் 21-ஆம் தேதி ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான உடனே விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் தொடர்ந்து முன்னேறி வந்த இந்த படம், ‘டியூட்’ உள்ளிட்ட படங்களுடன் போட்டியாக வெளியானாலும், தினசரி கலெக்ஷன் அதிகரித்து வந்தது.
தற்போது ‘பைசன்’ உலகளவில் சுமார் ரூ.80 கோடி வரைகூட்டலை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 21 முதல் வெளியிடப்படவுள்ளது என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர்.