‘அகண்டா 2’ திரைப்படத்தில் தனது portions அனைத்தையும் பாலகிருஷ்ணா முடித்து விட்டார். டிசம்பரில் படம் வெளியாக இருப்பதால், அதற்கான பிரசார வேலைகள் தற்போது தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த படத்துக்குப் பிறகு கோபிசந்த் மாலினேனி இயக்கும் புதிய படத்தில் நடிக்க பாலகிருஷ்ணா தனது தேதிகளை வழங்கியுள்ளார்.
இந்த புதிய திரைப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக இன்று, அவரது பிறந்தநாளை முன்னிட்டு, படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். ‘பெத்தி’ படத்தை தயாரித்து வரும் விருத்தி சினிமாஸே இந்த திரைப்படத்தையும் தயாரிக்கிறது.
‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ போன்ற படங்களுக்குப் பிறகு, மீண்டும் ஒருமுறை பாலகிருஷ்ணா – நயன்தாரா கூட்டணியில் படம் உருவாகிறது என்பதும் முக்கியமானது. இதுவரை வணிக ரீதியிலான கதைகளில் வெற்றிகரமாக படங்கள் எடுத்த கோபிசந்த் மாலினேனி, இந்த முறையே வரலாற்று சார்ந்த கதையை இயக்க உள்ளார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.