பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களில் வெற்றி பெற்றுக், ஆட்சியை தொடர்ந்துள்ளது.
இதையடுத்து, தற்போதைய மாநில அமைச்சரவையின் கடைசி கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது. சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றதற்காக, அமைச்சர்கள் நிதிஷ் குமாரை வாழ்த்தினர்.
பின்னர், தற்போதைய சட்டப்பேரவையை கலைப்பது என முடிவு செய்யப்பட்டு, முதல்வர் நிதிஷ் குமார் ஆளுநர் ஆரிப் முகமது கானை சந்தித்து, சட்டப்பேரவையை கலைக்க பரிந்துரை செய்தார். இதன்படி, நவம்பர் 19-ம் தேதி சட்டப்பேரவை முறையாக கலைக்கப்படும்.
இதையடுத்து, புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. நவம்பர் 20-ம் தேதி பாட்னாவில் காந்தி மைதானத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட நிகழ்ச்சியில், நிதிஷ் குமார் 10-வது முறையாக பதவியேற்க உள்ளார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் BJP கூட்டணி மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ளனர்.