ரஜினிகாந்த், அமிதாப் பச்சனின் நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மரணம் – திரையுலகத்தில் இரங்கல்

Date:

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் மற்றும் ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே.எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் முன்னாள் இயக்குனராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றி பல முன்னணி நடிகர்களை உருவாக்கியவர், கோபாலி என அறியப்பட்டவர். இன்று அதிகாலை இவரது இறுதி நிமிடங்கள் முடிவடைந்தது.

புனேயில் உள்ள நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமாவின் முதல் மாணவர்களில் ஒருவராக திகழ்ந்த இவர், பின்னர் டாக்டர் பட்டமும் பெற்றார். இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கியவர் மற்றும் பல இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தியவர்.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ராதா ரவி, நாசர் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி வழங்கியவர் கே.எஸ்.நாராயணசாமி. இயக்குநர் கே. பாலச்சந்தர் அவருடைய நடிப்பு திறமையைப் பார்த்து ரஜினிகாந்தை அறிமுகப்படுத்தியவர் இவரே.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து கே.எஸ்.நாராயணசாமிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷுப்மன் கில் மருத்துவமனையில் அனுமதி – தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் சந்தேகம்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் காயமடைந்த இந்திய...

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம் – ஆந்திர அமைச்சர் பட்டு வஸ்திர காணிக்கை

திருப்பதிக்கு அருகிலுள்ள திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், கார்த்திகை மாத வருடாந்திர...

இயக்குநர் ராஜமவுலி பேச்சால் சர்ச்சை – “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை”

‘ஆர்ஆர்ஆர்’ வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ரాజமவுலி, மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கும்...

பிஹார் சட்டப்பேரவையை கலைக்க முதல்வர் நிதிஷ் பரிந்துரை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயக கூட்டணி (NDA) 202 இடங்களில் வெற்றி...