அசாமில் வாக்காளர் பட்டியலை சிறப்பு திருத்தம் (Special Revision – SR) செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டு பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தத்தை (Special Intensive Revision – SIR) நடத்தியதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் சிறப்பு திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
அசாமில் இந்த சிறப்பு திருத்தம் (SR) மேற்கொள்வது தொடர்பாக தேர்தல் ஆணையம் (திங்கள்) அறிவிப்பு வெளியிட்டது. அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, வருடாந்திர சிறப்பு சுருக்கத் திருத்தமும் (Annual Summary Revision) மற்றும் சிறப்பு தீவிர திருத்தமும் (SIR) இடையேயான நடைமுறையை இந்த சிறப்பு திருத்தம் பின்பற்றும்.
ஒரு மூத்த அதிகாரி கூறியதாவது:
“சிறப்பு திருத்தம் என்பது சிறப்பு சுருக்கத் திருத்தத்தை மேம்படுத்தும் நடைமுறையாகும். சிறப்பு தீவிர திருத்தத்தில் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்பு படிவங்களை தவிர்த்து, ஏற்கனவே உள்ள பட்டியலில் உள்ள வாக்காளர்கள் இருப்பதை பிஎல்ஓக்கள் வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பார்கள்.”
நடைமுறை மற்றும் காலக்கெடு:
- பிஎல்ஓக்கள் வீடு வீடாகச் செல்வது: நவம்பர் 22 – டிசம்பர் 20
- ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: டிசம்பர் 27
- இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: அடுத்த ஆண்டு பிப்ரவரி 10
இந்த நடவடிக்கை மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் நீக்கப்படும்.
- தகுதியுள்ள குடிமக்கள் எல்லாரும் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யும்
- தகுதியற்ற நபர்கள் பட்டியலில் இருந்தால் பெயர்கள் நீக்கப்படும்
- ஒரே பெயர் பல இடங்களில் பதிவாகியுள்ளதா, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா, நிரந்தரமாக வெளியேறிவிட்ட நபர்களின் பெயர்கள் உள்ளதா என்பதையும் பிஎல்ஓக்கள் சரிபார்ப்பார்கள்.