சென்னை வடபழனியை அடுத்த சாலிகிராமத்தில் பரணி காலனி, சூர்யா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பால விநாயகர் கோயிலில், சுயம்பு மூர்த்தியாக தோன்றிய அரசமர் பிள்ளையாருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகுகால திரிசதி அர்ச்சனை நடைபெறுகிறது.
இக்கோயில் அரங்காவலரும், ஸ்ரீ பால விநாயகர் சேவா டிரஸ்ட் தலைவருமான குருஜி ஸ்ரீ சுப்பிரமணியம் கூறியதாவது:
- 1983-ம் ஆண்டு, நண்பருடன் சேர்ந்து ரூ.20,000 செலவில், குடிசை அளவில் விநாயகருக்காக கோயிலை நிறுவினோம்.
- 1987-ம் ஆண்டு முதல் ஏகதின லட்சார்ச்சனை தொடங்கப்பட்டது.
- 2000-ம் ஆண்டு ராஜ கோபுரம் கட்டி, மூலவர், முருகர் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகளை அமைத்தோம்.
ஏகதின லட்சார்ச்சனையின் 14-ம் ஆண்டில், அரசமரில் சுயம்பு விநாயகர் தோன்றினார். அதற்குப் பிறகு, அரசமர் விநாயகருக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ராகுகாலத்தில் திரிசதி அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும், ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் இக்கோயிலை ‘திவ்ய ஷேத்ரம்’ எனக் குறிப்பிடுவர் என்று அவர் தெரிவித்தார்.