உலக ஜூனியர் பாட்மிண்டன்: இந்திய வீராங்கனை தன்வி சர்மாவுக்கு வெள்ளிப் பதக்கம்
அசாம் மாநிலம் குவாஹாட்டியில் நடைபெற்ற உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை தன்வி சர்மா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தன்வி சர்மா, தாய்லாந்து வீராங்கனை அன்யாபாட் பிச்சிட்பிரீச்சாஸக் எதிராக மோதினார். இந்த ஆட்டத்தில் தன்வி சர்மா 7–15, 12–15 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்றார். இதன் மூலம் அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இதன்மூலம் உலக ஜூனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் வரலாற்றில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை தன்வி சர்மா பெற்றுள்ளார். இதற்கு முன்பு அபர்ணா பொப்பட் (1996), சாய்னா நெவால் (2006), சிரில் வர்மா (2015), சங்கர் முத்துசாமி (2022) ஆகியோர் இதே சாதனையைப் பதிவு செய்திருந்தனர்.
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் சாய்னா நெவால்தான். அவர் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஷிப்பில் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.