விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் இசையை சாய் அபயங்கர் அமைக்கிறார் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.
பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக லிஜோ மோல் ஜோஸ் நடித்துக் கொண்டிருக்கிறார். அட்லி தயாரித்து வரும் இந்த படத்திற்கான இசைப் பொறுப்பு சாய் அபயங்கருக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இதை நேர்காணலில் உறுதிப்படுத்தினார்.
சாய் அபயங்கர் தனது பேட்டியில் கூறியதாவது:
“80-களைக் களமாகக் கொண்ட ‘மார்ஷல்’ படத்தில் இசையமைத்து வருகிறேன். அதற்குப் பிறகு 60-களில் நடக்கும் இன்னொரு கதையிலும் இசை அமைக்கிறேன். பாலாஜி தரணிதரன் இயக்கும் விஜய் சேதுபதி நடித்த படத்தின் வேலைகளிலும் இருக்கும் போது அட்லி அண்ணாவை சந்தித்தேன்,” என தெரிவித்தார்.
இதனூடாக, விஜய் சேதுபதி நடிக்கும் இந்த புதிய படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைப்பது உறுதியாகியுள்ளது.
அட்லி தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் லிஜோ மோல் ஜோஸ் தவிர இன்னும் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.