சித்தார்த் மற்றும் ராஷி கன்னா ஜோடி நடிக்கும் புதிய காமெடி திரைப்படத்திற்கு ‘ரவுடி அண்ட் கோ’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் சுனில், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, பிராங்க்ஸ்டர் ராகுல், வெற்றி மணி, சார்லஸ் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வம்சி எதிர்மறை கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார்.
‘டக்கர்’ படத்தை இயக்கிய கார்த்திக் ஜி. கிரிஷ் இந்த படத்தையும் இயக்குகிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், ரேவா இசையமைப்பில் பாடல்கள் உருவாகியுள்ளன. பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சுதன் சுந்தரம் இப்படத்தைத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியிடுகிறார்.
படத்தின் தலைப்பு குறித்து இயக்குநர் கார்த்திக் ஜி. கிரிஷ் கூறுகையில்:
“ரவுடிகளின் சக்தி, புகழ், அவர்களின் ‘கார்ப் பரேட்’ போன்று நடக்கும் சாம்ராஜ்யத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால் ‘ரவுடி அண்ட் கோ’ என்ற பெயரைத் தேர்வு செய்தோம். படம் முழுவதும் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்குடன் உருவாகியுள்ளது. படப்பிடிப்பு முடியிவிட்டது; மேலும் 15 முதல் 20 நாட்களில் போஸ்ட்-ப்ரொடக்ஷன் பணிகளும் முடிந்து விடும்,” என்றார்.