பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் 243 இடங்களில் ஆளும் என்டிஏ கூட்டணி 202 இடங்களை கைப்பற்றி வலுவான வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில், ஆர்ஜேடி தலைமையிலான மெகா கூட்டணி 35 இடங்களாக மட்டுமே சுருங்கியுள்ளது. இதில் ஆர்ஜேடி 25 இடங்களையே பெற்றுள்ளது.
இந்தத் தோல்விக்கு பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
மெகா கூட்டணியில் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கையின்மை
மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்படுவதை காங்கிரஸ் மனதார ஏற்றுக்கொள்ளவில்லை. யாத்திரைகளில் கூட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காதது கூட்டணிக்குள் விரிசல் ஏற்படுத்தியது.
தொகுதி பகிர்வு, பதவிப் பேச்சுவார்த்தையில் முரண்பாடு
இடதுசாரிகள் மற்றும் விஐபி தலைவர் முகேஷ் சாஹ்னி அதிக தொகுதிகளை கோரியதால் கூட்டணிக்குள் பதட்டம் அதிகரித்தது. டெல்லியில் நடத்திய பேச்சுவார்த்தைகளிலும் தேஜஸ்விக்கு எதிர்பார்த்த நிறைவேற்றம் கிடைக்காதது முக்கிய பின்னடைவாக அமைந்தது.
விஐபி தலைவர் துணை முதல்வர் அறிவிப்பு – மகாதளித் வாக்குகளை பறிகொடுத்தது
முகேஷ் சாஹ்னி துணை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, மகாதளித் சமூகத்தைத் தூரப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், முஸ்லிம் சமூகத்திற்கான துணை முதல்வர் யார் என்பதில் தெளிவளிக்காமை அந்த சமூகத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஏஐஎம்ஐஎம் புறக்கணிப்பு – முஸ்லிம் வாக்குகள் பிளவு
ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி கூட்டணியில் இணைய விரும்பியபோதும், அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதன் விளைவாக பாஜக போட்டியிட்ட 12 இடங்கள் இழந்ததில் 5 இடங்களை ஓவைசி கட்சி கைப்பற்றியது.
ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி பிரச்சாரம் பலனளிக்கவில்லை
ராகுல் காந்தி பல்வேறு பிரச்சார முயற்சிகள் எடுத்தபோதும், அவை வாக்காக மாறவில்லை. மீனவர்கள் உடன் தண்ணீரில் குதித்து பிரச்சாரம் செய்த சம்பவம் கூட ஏற்றுக்கொள்ளப்படாத செயலாக விமர்சிக்கப்பட்டது. பிரியங்கா காந்தியின் பிரச்சாரமும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
பிரசாந்த் கிஷோர் – ஜன் சுராஜ் கட்சியின் தாக்கம்
பிரசாந்த் கிஷோரின் புதிய கட்சியால் எதிர்க்கட்சி வாக்குகள் மேலும் சிதறியதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
20 வருட என்டிஏ ஆட்சிக்கு எதிரான வாக்குகள் எதிர்க்கட்சிகளுக்கு சேராதது
என்டிஏவுக்கு எதிரான அலை இருக்கும் என்ற மெகா கூட்டணியின் கணிப்பு தவறாகி, வாக்குகள் எதிர்பார்த்தபடி திரளவில்லை.
அரசியல் தாக்கம்
பிஹார் வெற்றியின் மூலம் பாஜக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களிலும் தன் தாக்கத்தை அதிகரிக்க முயற்சிக்க முடியும் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன