சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் டிசம்பர் 27-ம் தேதி நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு, கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70,000 பக்தர்கள், ஸ்பாட் புக்கிங் மூலம் மேலும் 20,000 பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு பக்தர்கள் வசதிக்கான ஏற்பாடுகள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் வசதி ஏற்பாடுகள்:
- பம்பையில் 10 புதிய கொட்டகைகள் அமைக்கப்பட்டு, 10,000 பக்தர்கள் தங்கும் வசதி
- பம்பை ஹில்டாப், சக்கு பாலம் பகுதிகளில் சிறிய வாகனங்களுக்கான நிறுத்தங்கள்
- பம்பை முதல் சந்நிதானம் வரை 56 இடங்களில் சுக்கு நீர் விநியோகம்
- தரிசன வரிசையில் பிஸ்கட், மூலிகை நீர் வழங்கல்
- அன்னதானம் ஏற்பாடு
- பாதயாத்திரை பக்தர்களுக்காக 24 மணி நேர பிசியோதெரபி மையங்கள்
மொத்தம் 41 நாட்கள் மண்டல கால பூஜைகள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், சபரிமலை செல்லும் முக்கிய வனப்பாதையான சத்திரம் பகுதியில், இடுக்கி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஷைஜு பி. ஜேக்கப் தலைமையில் போலீஸ், சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.