மகிழ் திருமேனி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
அஜித் நடிப்பில் வெளிவந்த ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை மகிழ் திருமேனி கடைசியாக இயக்கியுள்ளார். அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதன்பிறகு, அவர் அடுத்த படத் திட்டத்தில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது, மும்பை நிறுவனம் மிராக்கிள் மூவிஸ் அந்த திரைப்படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி, நாயகியாக ஷ்ரத்தா கபூர், வில்லனாக சஞ்சய் தத் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் செய்யப்படவில்லை. மகிழ் திருமேனி இப்படத்தை தமிழ் மற்றும் இந்தி இருமொழியிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இறுதிப் பேச்சுவார்த்தைகள் முடிந்த பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகிழ் திருமேனி ‘தடையறத் தாக்க’, ‘மீகாமன்’, ‘தடம்’ போன்ற பல த்ரில்லர் படங்களில் வெற்றி கண்டவர். ‘விடாமுயற்சி’ தோல்விக்கு பிறகு, அவர் மீண்டும் தனது தனித்துவமான பாணியில் ஒரு த்ரில்லர் திரைப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். அடுத்த ஆண்டு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.