டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு பிஹார் தேர்தல் வெற்றியை கொண்டாடும் விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
பிரதமர் மோடி கூறியதாவது:
“பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. பிபாரின் மக்களால் தரப்பட்ட வாக்குகள் முழு தேசத்துக்கும் பார்வையை திருப்பியுள்ளன. பொதுமக்கள் பெருமளவில் வாக்களித்து, வளர்ச்சிக்காக ஆதரவு தெரிவித்துள்ளனர். பழைய தேர்தல் சாதனைகள் உடைக்கப்பட்டுள்ளன. பிஹார் மக்களுக்கு, குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நன்றியை தெரிவிக்கிறேன்.”
அவர் மேலும் கூறியதாவது:
“முதல்வர் நிதிஷ் குமாரின் திறமையான தலைமை தேர்தல் வெற்றிக்கு வழிவகுத்தது. கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் மிக உழைத்தனர். அண்மையில் பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் நடந்தது; இதில் மக்களின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது. தேர்தல் அமைதியாக நடைபெற்று, எந்த பகுதியிலும் மறுவாக்குப்பதிவு நிகழ்ந்ததில்லை. தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் சிறப்பாக பணியாற்றினர்.”
பொய் தகவல்களை பரப்புவதற்கான முயற்சிகள் மக்கள் நம்பவில்லை. ஜாமீனில் வெளியே நடமாடும் நபர்களை ஆதரிக்க மாட்டோம் என்று மக்கள் திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் பிஹார் வேகமான வளர்ச்சி பாதையில் உள்ளது, இது தொடரும்.
பிபாரில் கிடைத்த வெற்றியால் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும், கேரளாவுக்கும், மேற்குவங்கம் மற்றும் அசாமுக்குமான பாஜக தொண்டர்களுக்கு புதிய உற்சாகம் கிடைத்துள்ளது. பாஜக தொண்டர்களால் முடியாதது எதுவும் இல்லை; மனதை வைத்தால் எதையும் சாதிக்க முடியும்.
பிபாரில் காட்டாட்சி நிலை தவிர்க்கப்பட்டுள்ளது; மேற்குவங்கத்தில் நடக்கும் காட்டாட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பிபாரில் கிடைத்த வெற்றி, இந்த மாநிலங்களிலும் எதிரொலிக்குமென பிரதமர் மோடி தெரிவித்தார்.