திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22ஆம் தேதி தொடக்கம்

Date:

திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 22ஆம் தேதி தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா வரும் அக்டோபர் 22ஆம் தேதி தொடங்குகிறது.

இதையொட்டி அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது.

அன்று சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்மன்களுடன் தங்கச் சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்துக்கு எழுந்தருளுகிறார். அங்கிருந்து திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு சுவாமிக்கும் அம்மனுக்கும் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்ட பின்னர், இருவரும் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதியில் பவனி வந்து கோயில் திரும்புவார்கள்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும். அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளுகிறார். பின்னர் கடற்கரையில், சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

தொடர்ந்து சந்தோஷ மண்டபத்தில் சுவாமிக்கும் அம்மனுக்கும் மகா தீபாராதனை நடைபெறும்.

அடுத்த நாள், அக்டோபர் 28ஆம் தேதி, அதிகாலை தெய்வானை அம்மன் கோயிலிலிருந்து தபசு காட்சிக்காக புறப்படுகிறார். மாலை 6 மணியளவில், அம்மனுக்கு சுவாமி காட்சி அருளி தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது.

இரவு, சுவாமி குமரவிடங்க பெருமான் மற்றும் தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் க. ராமு உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கன்யாகுமரி மாவட்ட பாரதிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம்… பொதுக்குழு கூட்டம் – புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

கன்யாகுமரி மாவட்ட பாரதிய ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் –...

அழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் பாரம்பரிய விழா

அழகர் பெருமாள் கோயிலில் பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் பாரம்பரிய விழா திண்டுக்கல்...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: திமுகவின் தலையீடு மீது உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: திமுகவின் தலையீடு மீது உரிமையாளர்கள் குற்றச்சாட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில்...

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பின் பாகிஸ்தான் அவசர நடவடிக்கைகள் – USA உறவை மீட்டெடுக்க முயற்சி

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பின் பாகிஸ்தான் அவசர நடவடிக்கைகள் – USA உறவை...